அமெரிக்க அரசியல்வாதியும், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினருமான பிராட் ஷெர்மன் (Brad Sherman), சமீபத்தில் விமானத்தில் பயணம் செய்தபோது தனது ஐபேடில் (iPad) ஆபாசப் படங்களைப் பார்த்ததாகக் கூறப்பட்டதால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

“டியர் ஒயிட் ஸ்டாஃபர்ஸ்” (Dear White Staffers) என்ற பெயரில் இயங்கும் எக்ஸ் (X – முன்னர் ட்விட்டர்) கணக்கில் வெளியான புகைப்படங்களால் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.

விமானத்தில் தான் ஆபாசப் படங்களைப் பார்க்கவில்லை என்று மறுப்புத் தெரிவித்த ஷெர்மன், தன் செயலைப் பாதுகாத்துக்கொண்டு, அந்த ஆபாசமான படங்கள் தனது எக்ஸ் (X) கணக்கின் ‘ஃபார் யூ’ (For You) பக்கத்தில் தானாகவே காட்டப்பட்டன (Force-feeding) என்றும், இதற்குக் காரணம் எலான் மஸ்கின் எக்ஸ் அல்காரிதம் தான் என்றும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

இதுதொடர்பாகப் பேசிய அவர், “நான் ஒரு பெண்ணின் படத்தைப் பார்த்தால், அதைச் சூரிய அஸ்தமனத்தைப் பார்ப்பதை விட அதிக நேரம் பார்க்கலாம்” என்றும் கூறியுள்ளார். ஆயினும், பல பயனர்கள் ‘ஃபார் யூ’ பக்கம் ஒருவரின் முந்தைய தேடல் வரலாற்றின் அடிப்படையிலேயே பரிந்துரைகளை வழங்கும் என்று கூறி, ஷெர்மனின் வாதத்தை விமர்சித்துள்ளனர்.