மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, சரத்குமார், பிரபு, ஐஸ்வர்யா ராய், திரிஷா உட்பட பலரது நடிப்பில் உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்தப் படத்தின் 2 ஆம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ள பொன்னியின் செல்வன் 2ம் பாகத்தின் இறுதி கட்டப் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. முதல் பாகம் அதிக வரவேற்பை பெற்றதால், 2-ம் பாகத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் கிளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டு உள்ளது. ஒரு நிமிடமுள்ள இந்த வீடியோவில் ஜெயம்ரவி, கார்த்தி, விக்ரம், ஜெயராம் போன்றோர் படத்தில் தங்களது கதாபாத்திரங்களை விவரிக்கின்றனர். இந்த வீடியோவானது தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.