நடிகர் ராம் சரண் தற்போது அமெரிக்காவில் வசிக்கும் நிலையில், ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் நடித்த RRR படத்திற்கு அமெரிக்காவில் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது. இதில் RRR என்பது இரத்தம் ரணம் ரெளத்திரம் என்று பொருள். இந்த படம் ஆஸ்கார் ரேஸில் உள்ளது. மேலும் சமீபத்தில் Hollywood Critics Association விருது விழாவில் RRR படத்திற்கு 5 விருதுகள் கிடைத்த நிலையில், இந்த விழாவிற்கு பின்னர் நடிகர் ராம் சரண் மீடியாக்களுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.
அதில் திருமணம் ஆகி பல ஆண்டுகள் கழித்து தற்போது ராம் சரணின் மனைவி கர்ப்பமாக இருக்கும் நிலையில், மருத்துவ பரிசோதனைக்கு gynaecologist Dr Jennifer Ashton என்பவரிடம் செல்ல இருப்பதாக கூறினார். பின் அவர் பேசியதை வைத்து பார்க்கும்போது பிரசவம் அமெரிக்காவில் தான் நடக்கும் என்ற தகவல் பரவியது. இந்நிலையில் தற்போது ராம் சரண் மனைவி ட்விட்டரில் விளக்கம் கொடுத்துள்ளதில், இந்தியாவில் தான் பிரசவம் நடைபெறும் என குறிப்பிட்டு இருந்தார். மேலும் அதில் ஒரு பிரபல தனியார் மருத்துவமனை பெயரையும் குறிப்பிட்டு இருக்கிறார்.
Dr Jen Ashton, ur too sweet. Waiting to meet you. Pls join our @HospitalsApollo family in India along with Dr Sumana Manohar & Dr Rooma Sinha to deliver our baby 🤗❤️
A big shout out to all the viewers of @ABCGMA3 & @AlwaysRamCharan ‘s fans & well wishers. U are much loved https://t.co/byeGqOllsK
— Upasana Konidela (@upasanakonidela) February 25, 2023