பொன்முடி மீதான சொத்துகுவிப்பு வழக்கு மறு விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில்  கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.

பொன்முடிக்கு எதிரான வழக்கிலிருந்து அவர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக சென்னை நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேசன் தானாக முன்வந்து மறு விசாரணைக்கு எடுத்திருக்கிறார். இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் பொன்முடி அவரது மனைவி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை இன்று தள்ளி வைக்கப்பட்டு இருந்தது. அதன்படி இந்த வழக்கு விசாரணை இன்று நீதிபதி ஆனந்த வெங்கடேசன் முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்,  தாமாக முன்வந்து எடுத்த வழக்கை,  எடுத்த நீதிபதியே விசாரிக்க முடியாது என்றும், தலைமை நீதிபதி ஒப்புதலை பெற்று  மற்றொரு நீதிபதி தான் விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.அதன்படி இந்த வலக்கை வேறு நீதிபதிகள் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த வழக்கை  ஒரு நீதிமன்றத்தில் மற்றொரு நீதிமன்றத்திற்கு மாற்றியது உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மாற்றப்பட்டது. அந்த நிர்வாக உத்தரவு எதன் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்டது என்பதை ஆராயாமல்….  நீதிமன்றத்தின் பதிவாளரை கேட்காமல் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் குற்றம் சாட்டப்பட்டது.

அதே போல நீதிபதி ஆனந்த வெங்கடேசன் பிறப்பித்த தீர்ப்பில் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட கருத்துக்களாக இடம் பெற்றிருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பிலும், பொன்முடி தரப்பிலும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக பொன்முடி விடுவிக்கப்பட்டது தொடர்பாக தானாக முன்வந்து எடுத்த வழக்கை வேறு  நீதிபதி விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை பிரதானப்படுத்தப்பட்டாலும்,  இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வதற்கு இன்னும் அவகாசம் இருக்கிறது.

இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வதா ? வேண்டாமா ? மேல்முறையீடுக்கு உகந்ததா ? இல்லையா ?  என்பதை பரிசீலிக்கப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தற்போது நிலையில் இந்த வழக்கை தாங்கள் விசாரிக்க முடியாது என்றும்….  அதாவது இந்த தாமாக எடுத்த நீதிபதியே இந்த வழக்கை விசாரிக்க முடியாது. வேறு நீதிபதிகள் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த வழக்கு நடந்து முடிந்து பல ஆண்டுகள் ஆனாலும் பரவாயில்லை. கடந்த ஜூன் மாதம் இறுதியில் தான் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. எனவே அதன் மேல்முறையீடு செய்வதற்கான காலம் இன்னும் இரண்டு மாதங்களுக்கு மேல் இருக்கிறது என்ற ஒரு விளக்கமும் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டுள்ளது. இது தரப்பு விளக்கத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த வழக்கை தானே தொடர்ந்து விசாரிப்பதா ? அல்லது வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டுமா ?  என்பது குறித்து அடுத்த வாரம் முடிவு எடுப்பதாக தெரிவித்து,  வழக்கின் விசாரணையை வரும் 14ஆம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார்.