தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களில் உள்ள மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்புவார்கள். அவர்களுடைய வசதிக்கேற்ப போக்குவரத்துத்துறை சார்பாக பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருநெல்வேலி, நாகர்கோவில், மதுரை, தூத்துக்குடி, தென்காசி, திருச்சி உள்ளிட்ட தென் மாவட்ட பகுதியிலிருந்து இன்று(ஜன,.16) கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படுகிறது.
அதோடு கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு, கும்பகோணம், தஞ்சாவூர், தேனி, திண்டுக்கல், ஓசூர், தர்மபுரி, பெங்களூர் உள்பட பல்வேறு நகரங்களில் இருந்தும் சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 1187 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 3287 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இன்று மாலையிலிருந்து இரவு வரை சிறப்பு பேருந்துகள் சென்னைக்கு புறப்பட்டு வருகிறது.