கால்நடைகளுக்கு தோல் கழலை நோய் அறிகுறி ஏற்பட்டால் தடுப்பூசி போட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் தற்போது கால்நடைகளுக்கு தோல் கழலை நோய் தாக்கப்பட்டு அதிக அளவு உயிரிழப்பு ஏற்பட்டு வருகின்றது. ஆகையால் தமிழ்நாட்டில் வடக்கு மாவட்டங்களில் கால்நடைகளை தாக்கி இருக்கின்றது. இது ஒரு வைரஸ் கிருமியால் ஏற்படும் நோயாகும். மேலும் உண்ணிகள் மற்றும் கொசுக்கள் மூலமாக இந்த வைரஸ் பரவுகின்றது. நோய் தாக்கப்பட்ட கால்நடைகளுக்கு காய்ச்சல், தீவனம் உண்ணாமை, தோல் தடுப்பு உள்ளிட்ட அறிகுறிகள் காணப்படும். இந்த நோய் சிறு கன்றுகள் முதல் கரவை மாடுகள் வரை அனைத்தையும் தாக்குக்கின்றது.

ஆகையால் நோய் அறிகுறி ஏற்பட்டால் உடனடியாக கால்நடை மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். அனைத்து கால்நடை மருத்துவ நிலையங்களிலும் போதுமான அளவு மருந்து இருப்பு வைக்கப்பட்டிருக்கின்றது. தங்கள் கிராமங்களுக்கு தடுப்பூசி குழு வருகை தரும். அப்போது தங்கள் கால்நடைகளுக்கு தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். மேலும் அனைவருக்கும் அறிவுறுத்த வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொண்டால் நோய் வராமல் தடுக்கவும் 21 நாட்களுக்கு பின் கால்நடைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படும். அதற்குள் அறிகுறி ஏற்பட்டால் கால்நடை மருத்துவரை அணுகி சிகிச்சை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.