விழுப்புரம் ரயில் நிலையத்தில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் சட்டை அணியாமல் பேண்ட் மட்டும் அணிந்திருந்த நிலையில் அங்கும், இங்கும் சுற்றித்திரிந்தார். அந்த நபர் பயணிகளை ஆபாசமான வார்த்தைகளால் திட்டி ரகளை செய்துள்ளார். மேலும் பயணச்சீட்டு எடுக்க வரிசையில் நின்று கொண்டிருந்த சில பயணிகளை அவர் தாக்க முயன்றார். இதுகுறித்து விழுப்புரம் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் வட மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதனால் போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.