
சென்னை மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் கற்பக விநாயகர் கோவில் தெருவில் ஆட்டோ டிரைவரான டில்லி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார். இவர்களது மகள் நந்தினி பூந்தமல்லியில் இருக்கும் அரசு உதவி பெறும் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று மாலை நந்தினி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நந்தனியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், கோவர்த்தனகிரி பகுதியில் வசித்த பிளஸ்-2 மாணவரான தேவா(17) 2 பாடங்களில் தோல்வி அடைந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். அவரை காதலித்த நந்தினி தேவா இறந்த துக்கத்தில் தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. ஆனாலும் வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.