
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வடசேரி கிருஷ்ணன்கோவில் பகுதியில் மாடசாமி என்பவர் வசித்து வசித்து வருகிறார். இவருக்கு வேலம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இருவரும் மாநகராட்சி அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளிகளாக வேலை பார்த்து வந்துள்ளனர். இந்த தம்பதியினருக்கு மூன்று மகள்கள் இருக்கின்றனர்.
இந்நிலையில் மகள்களின் திருமணத்திற்காக மாடசாமி பலரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது. மேலும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வரும் மாடசாமியை வேலம்மாள் கண்டித்தார். நேற்று முன்தினம் மது குடித்துவிட்டு வந்த மாடசாமியிடம் மகளின் திருமணத்திற்காக கடன் வாங்கியுள்ளோம் அதனை அடைக்காமல் சம்பாதிக்கும் பணத்தை மது குடித்து வீணடிப்பது சரியில்லை எனக் கூறி கண்டித்தார்.
பின்னர் மன உளைச்சலில் வேலம்மாள் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வேலம்மாளின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.