தென்காசி மாவட்டத்தில் உள்ள சாம்பவர் வடகரை பகுதியில் இருக்கும் முட்புதரில் இறந்த நிலையில் குழந்தையின் உடல் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் குழந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பிறந்து 10 நாட்களுக்கும் மேலான குழந்தையின் உடலை நாய்கள் கடித்து குதறியிருந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் குழந்தையை வீசி சென்றவர்கள் யார்? நாய்கள் கடித்து குதறியதால் குழந்தை இறந்ததா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.