பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ரங்க நகரில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமச்சந்திரன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ராமச்சந்திரன் டுவிட்டர் பக்கத்தில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், முன்னாள் டிவி செய்தி வாசிப்பாளர் ஆகிய இருவரது படத்தையும் இணைத்து அவதூறு செய்தி பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து பெரம்பலூர் தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ராமச்சந்திரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.