புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தொட்டியம்பட்டி பகுதியில் பிரசாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேன்மொழி என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று முன்தினம் தேன்மொழிக்கு மேலைசிவபுரி அரசு மருத்துவமனையில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. நேற்று தேன்மொழிக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனால் அவரை மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே தேன்மொழி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.