விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாம்பழம் பட்டு சாலை மேம்பாலத்தின் கீழ் இருக்கும் இந்திரா நகரில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த வீரப்பன், முருகன், பத்மநாபன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் கோனூர் பகுதியில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த வேலாயுதம், ரமேஷ், செந்தில் வேலன், கேசவன், கோவிந்தராஜ் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அவர்களிடம் இருந்த சீட்டு கட்டுகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.