சேலம் மாவட்டத்தில் உள்ள கத்தேரி சடையம்பாளையம் பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 22-ஆம் தேதி சசிகுமார் தனது குடும்பத்தினருடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். நேற்று முன்தினம் வீட்டிற்கு திரும்பி வந்த குடும்பத்தினர் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதனையடுத்து சசிகுமார் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த நகை, பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சசிகுமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.