சென்னையில் மெட்ரோ ரெயில் சேவைகளை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. இதில் 54 கி.மீ. தூரத்திலான வழித்தடத்தில், 3 பொதுப்பெட்டிகள் மற்றும் 1 மகளிருக்கான பெட்டி என 4 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரெயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. இதில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை சராசரியாக நாள் ஒன்றுக்கு 2.5 லட்சம் பேர் எனவும், விடுமுறை நாட்களில் மேலும் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் காலை மற்றும் மாலை உள்ளிட்ட கூட்ட நெரிசல் மிகுந்த நேரங்களில் இயக்கப்படும் மெட்ரோ ரெயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும் என பெரும்பாலான பயணிகளின்  கோரிக்கையை நிறைவேற்றும் வண்ணம் 6 பெட்டிகளை கொண்ட மெட்ரோ ரெயில்களை இயக்க மெட்ரோ ரெயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் கூறியுள்ளதாவது, பயணிகளின் கோரிக்கை படி, 6 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரெயில், பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யுமா? மற்றும் அதனை செயல்படுத்துவதற்கு எவ்வளவு செலவாகும்  என்பது தொடர்பான ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். பின் இதற்கான நிதி ஆதாரம் விரைவாக கிடைத்தால், 2 ஆண்டுகளுக்குள் 6 பெட்டிகள் கொண்ட புதிய ரெயில்களை பயன்பாட்டுக்கு கொண்டுவந்துவிடலாம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளார்கள்.