திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் பகுதியில் கூலி தொழிலாளியான ரவி என்பவர் வசித்து வந்துள்ளார் .உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ரவிக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்ட பரிசோதனை முடிவில் புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனால் மேல் சிகிச்சைக்காக ரவி மதுரை பாலரங்காபுரத்தில் இருக்கும் மண்டல புற்றுநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் வலி அதிகமாக இருந்ததால் வாழ்க்கையை வெறுத்த ரவி மருத்துவமனை கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.