பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா மாவட்டத்தில் கியாஷ்பூரா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் பல வருடங்களாக இயங்கி வரும் ரசாயன தொழிற்சாலையில் இன்று காலை 10 மணி அளவில் வழக்கத்திற்கு மாறாக வெள்ளை மற்றும் ஊதா நிறத்தில் புகை வெளியேறியுள்ளது. புகை அதிகளவில் வெளியேறியதால் அப்பகுதியில் நின்ற மக்கள் அதை வேடிக்கை பார்த்துள்ளனர். அப்போது திடீரென பலர் அங்கு சரிந்து விழுந்து உயிரிழந்தனர். அப்போதுதான் விஷ வாயு பரவுகிறது என்பது தெரிய வந்தது. உடனே சுதாகரித்துக் கொண்டு அங்கிருந்த மக்கள் பலர் வீடுகளுக்குள் சென்று கதவு மற்றும் ஜன்னலை இறுக்கமாக பூட்டிக் கொண்டனர்.

கீழே மயங்கி விழுந்தவர்களை இளைஞர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போது 11 பேர் உயரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதன்பிறகு 20 பேர் மருத்துவமனையில் சுயநினைவை இழந்து கவலைக்கிடமான நிலையில் இருக்கிறனர். இன்னும் விஷவாயு பரவுவதால் சம்பவ இடத்திற்கு மீட்பு படையினரும் போலீசாரும் சென்றுள்ளனர். அப்பகுதியில் உள்ள மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் அப்பகுதியில் இருந்து மக்களை மீட்கும் முயற்சியில் போலீசாரும் ராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.