மராட்டியம் அகமது நகரிலுள்ள பிரசித்தி பெற்ற ஷீரடி சாய்பாபா கோயிலில் தினசரி நாடு முழுவதும் இருந்து பெரும்பாலான பக்தர்கள் வருகை தந்து வழிபாடு செய்து வருகின்றனர். இந்த நிலையில் கோயிலுக்கான பாதுகாப்பை இனிமேல் மத்திய தொழிலக பாதுகாப்புப்படை மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பியது. கோயில் அறக்கட்டளையின் சார்பாக முழுஅடைப்பு போராட்டதுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

இதற்கிடையில் நாளை முதல் ஷீரடி சாய் பாபா கோயில் காலவரை இன்றி மூடப்படுமென தகவல் பரவத் தொடங்கியது. இதன் காரணமாக கோயிலுக்கு வரும் பக்தர்கள் இடையே குழப்பம் ஏற்பட்டது. இந்தநிலையில் கோயில் மூடப்படுவது தொடர்பாக வெளியான தகவல்களை ஷீரடி கோவில் நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்து  உள்ளது. கோவில் வழக்கம் போன்று திறந்திருக்கும் எனவும் பிரசாத கூடம், பக்தர்கள் தங்குமிடம், மருத்துவமனை என அனைத்தும் வழக்கம்போல செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.