திமுக இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, உதயநிதி அவர்கள் மிகத் தெளிவாக சொல்லி இருப்பது  50 லட்சம்…   தமிழகத்தில் இருந்து நீட்டுக்கு எதிராக 50 லட்சம் பேராவது சொல்ல வேண்டும் என்று அவர் சொல்லி இருக்கிறார். அதுக்கு நம்ம மாவட்டத்திலிருந்து நாம சொன்ன வேலையை செய்யணும்.

தொகுதி பொறுப்பாளர்கள் ஒன்றிய செயலாளரிடம் கொடுத்து…  இளைஞர் அணி அமைப்பாளர்கள் எல்லாரும் செய்யணும்… மாணவர் அணி அமைப்பாளரும் ஆக்டிவா செய்யனும்.  மாணவர் அணி  அமைப்பாளர் வீட்டில் வாங்கினேன் என்பதை விட மாணவரணி சந்தித்து வாங்குவதுதான் மிக மிக முக்கியம். அதுவும் ஹைஸ்கூல் இல்லாத ஊர் எது இருக்கா ?

நாம அரசியலா நீட்டை எதிர்த்து கொண்டிருக்கிற போது….  நாம் வெளியில் நின்னு….  அந்த கல்லூரியின் வாசலில் நின்னு  கையெழுத்துகளை எல்லாம் பெறணும். நீங்க இருக்கிற ஒவ்வொரு தொகுதிகளிலும்  அந்தந்த ஒன்றியம்,  நகரத்தில் இருப்பவர்கள் எல்லாம் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று அன்போடு நான் வேண்டி கேட்டு கொள்கின்றேன்.

ஆன்லைனில் இருந்தாலும்….  கார்டுல இருந்தாலும் இந்த ரெண்டுலயும் நீங்க செய்யணும்….   நம்ம விழுப்புரம் தெற்கு மாவட்டத்துல மிக அதிகமாக செய்ய வேண்டும் என்று நான் உங்களை அன்போடு கேட்டுக்கொள்கின்றேன். இப்படி எல்லாம் கேட்கிறதால நீங்க எல்லாம் வேற மாதிரி எல்லாம் பண்ண கூடாது. நேரடியா ஒவ்வொரு மாணவரிடம்…. ஒவ்வொரு குடும்பத்திலும் சென்று இந்த கையெழுத்தை பெற்று தர வேண்டும்…    நீட் தேர்வை பொறுத்தவரை  நான் உங்களுக்கு வைக்கிற அன்பான வேண்டுகோள் என தெரிவித்தார்.