கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலம் பேருந்து நிலையத்தில் இருக்கும் கடைகளில் பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியம் தலைமையில் சுகாதார துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சில கடைகளில் பிளாஸ்டிக் கவர்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அதிகாரிகள் பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்து கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும் பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.