தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமாக கொண்டாடப்பட்டு வருபவர் தல அஜித்குமார். இவரது நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசான துணிவு திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிரான்சில் தல அஜித் திரைப்படத்துக்கு மிகப் பெரிய ஓப்பனிங் உள்ளதாக அந்நாட்டு தொலைக்காட்சியில் கலந்துரையாடிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
பிரான்ஸின் முக்கியமான நகர்களில் பிரெஞ்ச் படங்களை விட துணிவு படத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளதாகவும், அஜித்குமாருக்கு பாரீஸில் பெரும்பாலான ரசிகர்கள் இருப்பதாக அந்நிகழ்ச்சியில் பேசப்பட்டுள்ளது. இவ்வளவு நாட்கள் துணிவு திரைப்படம் ஹவுஸ்புல் காட்சிகளில் ஓடுவது மிகப் பெரிய விஷயம் என்றும் பிரான்ஸ் தனியார் தொலைக்காட்சியில் பேசப்பட்டு உள்ளது.