பிரபல கன்னட டைரக்டர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள “கிக்” திரைப்படத்தில் நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்திருக்கிறார். தமிழ், கன்னடம் ஆகிய இரண்டு மொழிப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் தன்யா ஹோப், ராகினி திவிவேதி இருவரும் கதாநாயகிகளாக நடித்து உள்ளனர். பார்டியூன் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக நவீன்ராஜ் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு அர்ஜுன் ஜனயா இசை அமைக்க, சுதாகர் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

அதேபோல் நாகூரன் ராமச்சந்திரன் படத் தொகுப்பு பணிகளை மேற்கொண்டு உள்ளார். நடிகர் சந்தானம் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு திரையுலகை சேர்ந்த பிரபலங்களும், அவரது ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் சந்தானத்தின் பிறந்தநாளை முன்னிட்டு கிக் படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.