கேஜிஎப் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை அடுத்து, டைரக்டர் பிரசாந்த் நீல் தற்போது “சலார்” படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் பிரபாஸ் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானதில் இருந்து, இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. கேஜிஎப் படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் சலார் படத்தையும் தயாரிக்கிறது.

இத்திரைப்படத்தில் வரதராஜ மன்னார் எனும் கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடிக்கிறார். இந்த நிலையில் சலார் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவானது வெளியிட்டு உள்ளது. அந்த வகையில் இப்படம் வரும் செப்டம்பர் 28-ஆம் தேதி வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ரசிகர்கள் பலரும் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.