போன் பே பிரைவேட் லிமிடெட் தன்னுடைய துணை நிறுவனமான போன் பே இன்சூரன்ஸ் புரோக்கிங் சர்வீஸ், முன்னணி காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து விரிவான காப்பீட்டை வழங்கும் சுகாதார காப்பீட்டு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த சுகாதார மதிப்பீட்டு திட்டங்களை மற்றவற்றிலிருந்து வேறுபடுத்துவது யு பி ஐ மாதாந்திர கட்டண முறையில் அறிமுகமாகும். இது வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் மிக குறைந்த கட்டணத்தில் கிடைக்கும். இந்த சுகாதார காப்பீட்டு திட்டங்கள் சுமார் ஒரு கோடி வரையிலான கவரேஜ் உடன் வரும். பயணங்கள் எந்த வரம்பும் இல்லாமல் எந்த மருத்துவமனை அரையையும் தேர்வு செய்ய அனுமதிக்கிறது.

போன் பே இன்சூரன்ஸ் பிரேக்கிங் சர்வீசஸ் வழங்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்களுடன் பயணங்கள் தகவல் அறிந்த முடிவுகளை எடுப்பதற்கும் கோரிக்கைகளை தாக்கல் செய்வதற்கும் மற்றும் பிற சேவைகளை அணுகுவதற்கும் உதவுவதற்கு முன்பு மற்றும் விற்பனைக்கு முந்தைய உதவிகள் வழங்கப்படுகின்றன. இதில் மாதாந்திர சந்தாக்களில் பிரீமியம் செலுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் காப்பீடு செய்ய விரும்பும் அனைத்து உறுப்பினர்களுக்கான அடிப்படை விவரங்களை உள்ளிட்டு மேற்கோள்கள் பக்கத்திற்குச் சென்று விரும்பிய மேற்கோளை தேர்ந்தெடுத்து தனிப்பட்ட மற்றும் சுகாதார விவரங்களை உள்ளிட்டு அடுத்த பக்கத்திற்கு செல்ல வேண்டும். பின்னர் தகவலை பகுப்பாய்வு செய்து உங்கள் மாதாந்திர முறையை தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் செலுத்தும் முறையை தேர்வு செய்து கொள்ளலாம்.