பொதுவாகவே ஒவ்வொரு ரயிலின் கடைசி பெட்டியிலும் X என்ற குறியீடு இருப்பதை அனைவரும் பார்த்திருப்போம். ஆனால் வந்தே பாரத் ரயிலின் கடைசி பெட்டியில் இந்த குறியீடு இருக்காது. பாதுகாப்பு காரணங்களுக்காகவே ஒவ்வொரு ரயிலின் கடைசி பெட்டிகளும் இந்த குருவி வைக்கப்பட்டுள்ளது. அதாவது ரயிலின் கடைசி பெட்டி என்பதை இது குறிக்கின்றது. வந்தே பாரத் அதிவேக ரயில் என்பதால் அதன் கடைசி பட்டியில் இந்த குறி இருக்காது.

அது தனி தனி பெட்டியாக இல்லாமல் முழுமையாக ஒரே பெட்டியை போல் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலை இரண்டு திசைகளில் இருந்தும் இயக்க முடியும். அதனால்தான் வந்தே பாரத் ரயில்களில் இந்த குறியீடு கிடையாது. ரயில்வே பாதுகாப்பின் அடிப்படையில் பல வகையான சிக்னல்கள் அல்லது அடையாளங்களை பயன்படுத்துகின்றது. அதனைப் போலவே ரயிலின் கடைசி பெட்டியிலும் x என்ற குறியீடு ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்காக அமைக்கப்பட்டுள்ளது.

இது பொது மக்களுக்காக கிடையாது. ரயிலின் பின்புறத்தில் வரையப்பட்டுள்ள இந்த குறியீடு ரயிலின் கடைசி பெட்டி என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். Xகுறி தெரியவில்லை என்றால் அந்த ரயிலின் பின்புறம் வைக்கப்பட்டுள்ள பெட்டிகள் ரயிலில் இருந்து பிரிந்து எங்கோ பின்னால் விடப்பட்டுள்ளன என்று தெளிவாக புரிந்து கொள்ளலாம். இதன் காரணமாகத்தான் ரயிலின் கடைசி பெட்டியில் இந்த குறி வைக்கப்பட்டுள்ளது. இல்லையென்றால் இது ஆபத்தில் தான் முடியும். ஆனால் வந்தே பாரத் ரயில்களில் தனித்தனி பெட்டிகள் இல்லாமல் ஒரே பெட்டியாக இருப்பதாலும் இரண்டு பக்கத்திலும் இந்த ரயிலை இயக்க முடியும் என்பதாலும் இது போன்ற ஆபத்துகள் நேரிடாமல் இருக்கும் என்பதால் x என்ற குறியீடு வந்தே பாரத் ரயில்களில் இல்லை எனக்கு.