EPFO என்பது தனியார் துறையில் பணியாற்றும் நாட்டில் உள்ள அனைவருக்கும் பயனளிக்க கூடிய ஒன்றாகும். தனியார் துறை ஊழியர்களுக்கு சமூக பாதுகாப்பை வழங்கும் மிக முக்கியமான வழிமுறையாக இ பி எஃப் ஓ கருதப்படுகின்றது. இதன் சந்தாதாரர்களுக்கு அனைத்து வசதிகளையும் UMANG செயலி மூலமாக வழங்கப்படுகின்றது.

EPFO இன் முக்கிய பயன்களான பிஎஃப், EPS, EDLI ஆகும். இந்த மூன்று தீர்வுகளும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த செயலி மூலமாக இதனை எளிதாக கண்காணிக்க முடியும். உங்கள் கணக்கில் எவ்வளவு தொகை டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்பதை பாஸ்புக் மூலமாக பார்க்க முடியும். இந்த செயலி மூலம் உங்களின் பிஎப் பாஸ்புக் ஐ வீட்டிலிருந்து சரிபார்த்து விடலாம்.

முதலில் Umang செயலியை திறந்து EPFO என்று தேடுங்கள்.
அதில் வரும், ‘View Passbook’ ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
பின்னர்  உங்கள் UAN எண்ணை உள்ளிடவும்.
உங்கள் UAN எண்ணுடன் பதிவு செய்த மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTP ஐ சமர்ப்பிக்கவும்.
உறுப்பினர் ஐடியைத் தேர்ந்தெடுத்து இ-பாஸ்புக்கைப் பதிவிறக்கவும்.