ஆந்திராவில் தக்காளி கிலோக்கு 100 முதல் 120 வரை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் கடப்பாவை சேர்ந்த விவசாயி ஒருவர் ஒரு கிலோ தக்காளி 50 ரூபாய் என கூவி கூவி விற்பனை செய்ய தொடங்கினார். இதை கேட்டதும் பொதுமக்கள் பலரும் அவரிடம் தக்காளி வாங்க குவிந்துள்ளனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்படாமல் இருக்க விவசாயி வாடிக்கையாளர்களிடம் வரிசையில் நிற்கும்படி கேட்டுக்கொண்டார்.

இதை அடுத்து பொதுமக்களும் வரிசையில் நின்றனர்.  அனைவருக்கும் தக்காளி கொடுக்க வேண்டும் என்று நினைத்த விவசாயி ஒரு நபருக்கு மூன்று கிலோ தக்காளி மட்டுமே வழங்கியுள்ளார். சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை வரிசையில் நின்று மக்கள் தக்காளி வாங்கி சென்றுள்ளனர்.