இந்தியாவில் தற்போது யுபிஐ பண பரிவர்த்தனைகள் மக்களிடையே வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த யுபிஐ செயலிகள் வாடிக்கையாளர்களுக்கு கடன்களையும் வழங்குகிறது. இந்நிலையில் தற்போது ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் போன் பே, பேடிஎம் மற்றும் கூகுள் பே போன்ற செயலிகள் மூலம் முன் அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த தொகை வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களால் நிர்ணயிக்கப்படும் நிலையில், வாடிக்கையாளர்களின் கடனை செலுத்தும் திறனை மதிப்பீடு செய்த பிறகு அதற்கு ஏற்றவாறு கடன் வழங்கப்படும். இதற்கு கிரெடிட் லைன் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.

பயனர்களால் எவ்வளவு கடனை திரும்ப செலுத்த முடியும் என்பதை வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் மதிப்பீடு செய்த பிறகு அதற்கு ஏற்றவாறு கடன் வழங்கும். இந்த கடன் தொகையை வாடிக்கையாளர்கள் வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டும். அதன் பிறகு யுபிஐ செயலிகளுடன் உங்களுடைய கிரெடிட் கார்டையும் இணைத்துக் கொள்ளலாம். பயனர்கள் தற்போது ரூபே கிரெடிட் கார்டுடன் யுபிஐ செயலியை இணைத்துக் கொள்ள முடியும். இந்த அறிவிப்பை ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் நாணய கொள்கை கூட்டத்தின் போது தெரிவித்தார். மேலும் இந்த கிரெடிட் லைன் வசதி தற்போது பயனர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.