அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலில் வைக்கப்பட உள்ள ராமர் சிலைக்கு வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஜல அபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த அபிஷேகத்தில் பயன்படுத்துவதற்காக பாகிஸ்தானின் ராவி உட்பட 155 நாடுகளில் இருந்து நதிநீர் எடுத்துவரப்பட்டுள்ளது.

இந்நிலையில் அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய், உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் புகைப்படங்களை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். கோயில் கட்டுமான பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் நிறைவடையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு துவக்கத்தில் அயோத்தியில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.