இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் pf கணக்கு தொடங்கப்படுகிறது. அதில் ஊழியர்களின் சம்பளத்தில் ஒரு பகுதி பிடித்தம் செய்யப்பட்டு வரவு வைக்கப்படும். இந்த தொகைக்கு அரசு தரப்பில் இருந்து வட்டியும் வழங்கப்படும். சமீபத்தில் மத்திய பட்ஜெட்டில் பிஎப் கணக்கில் இருந்து ஐந்து ஆண்டு முடிவதற்குள் எடுக்கப்படும் பணத்திற்கு வட்டி விகிதம் 20% குறைக்கப்பட்டது. அதே சமயம் பான் கார்டுடன் இணைக்கப்பட்டிருக்கும் பிஎஃப் கணக்கிலிருந்து திரும்பப்பெறும் தொகை டிடிஎஸ் விதிக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நீங்கள் வேலை செய்து கொண்டிருக்கும் நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறினால் உங்களின் பிஎஃப் கணக்கையும் புதிய நிறுவனத்திற்கு நேரடியாகவும் ஆன்லைன் மூலமாகவும் மாற்றம் செய்யலாம்.

அதற்கு முதலில்  https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

  • அதில் UAN எண் மற்றும் PassWord உள்ளிட்ட வேண்டும்.
  • அடுத்ததாக “Online Services” என்பதை கிளிக் செய்து ,”One Member- One EPF Account (Transfer Request” என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.
  • அதில் புதிய நிறுவனத்தின் EPF கணக்கின் விவரங்களை உள்ளிட வேண்டும். பிறகு “Get Details” என்பதைக் கிளிக் செய்து PF கணக்கின் விவரங்களை சரிபார்க்கவும்.
  •  பிறகு EPF கணக்கு பரிமாற்றம் முடிவடைய 30 முதல் 45 நாட்கள் ஆகும். உங்களின் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி கணக்கு பரிமாற்ற நிலையை கண்காணிக்கலாம்.