திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து ஏழுமலையானை தரிசித்து விட்டு செல்கிறார்கள். பக்தர்களுடைய நலனை கருத்தில் கொண்டு கோவில் நிர்வாகம் பல்வேறு வசதிகளை செய்து கொடுக்கிறது

இந்நிலையில் பிப்.22- 28ம் தேதி வரையிலான 3300 சிறப்பு தரிசன ஆன்லைன் டிக்கெட்டை இணையதளத்தில் திருப்பதி தேவஸ்தானம் நேற்று வெளியிட்டது. மூத்த குடிமகன்கள், மாற்றுத் திறனாளிகள், 5 வயதுக்குட்பட்ட கைக்குழந்தைகளுக்கான டிக்கெட் இன்று  வெளியிடப்படுகிறது. https:// tirupatibalaji.ap.gov.in மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.