சில்லறை பணவீக்க உயர்வை கட்டுப்படுத்த பல்வேறு துறைகளுக்கான வரியை குறைக்க மத்திய அரசு உத்தேசித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்காச்சோளம், எரிபொருள் போன்றவற்றின் மீதான வரி குறையலாம் என தெரிகிறது.

டிசம்பர் மாதத்தில் 5.72 சதவீதமாக இருந்த சில்லறை பணவீக்கம் ஜனவரியில் 6.52 சதவீதம் ஆக உயர்ந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வரி குறைப்பு அமல்படுத்தப்பட்டால் எரிபொருள் விலை குறைய வாய்ப்புள்ளது.