குஜராத் மாநிலத்தில் ராஷ்டிர கதா ஷிவிர் எனும் பொது நல நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வேதிக் இயக்க அறக்கட்டளை நிறுவனர் சுவாமி தர்மபந்து, அந்த அறக்கட்டளையின் அறங்காவலர்கள், மத்திய துணை ராணுவப் படைகளின் அதிகாரிகள், ஏராளமான மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

அப்போது ஆளுநர் ரவி பேசியதாவது, தமிழில் பேசுவதிலும் தமிழர்களோடு பழகுவதிலும் பெருமைக் கொள்வதாக தெரிவித்தார். மேலும் தமிழ் இலக்கியம் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது. தமிழகத்தில் வாழ்ந்த பல கவிஞர்கள், சன்னியாசிகள் தமிழின் பெருமையை நமக்காக விட்டுச் சென்றுள்ளனர். அதுதான் நம்மை உயிர்ப்புடன் வைத்துள்ளது என தமிழின் பெருமை ஆளுநர் எடுத்துக் கூறினார்.