தமிழ் சினிமாவில் வளர்ந்து வரக்கூடிய நடிகைகளில் ஒருவர்தான் சாக்சி அகர்வால். இவர் காலா, விஸ்வாசம், அரண்மனை 3 ஆகிய பல்வேறு திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பிரபலமானார்.

நேற்று சாக்சி அகர்வாலின் “நான் கடவுள் இல்லை” படம் வெளியானது. இந்த படத்தின் ப்ரீமியர் ஷோவில் நடிகர் மட்டும் சிம்புவின் தீவிர ரசிகரான கூல் சுரேஷ் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் பத்திரிகையாளருக்கு பதிலளித்து கொண்டிருந்த சாக்சியின் கன்னத்தில் திடீரென கூல் சுரேஷ் முத்தம் கொடுத்து விட்டார். இச்சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.