மலையாள சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் துல்கர் சல்மான். இவர் தற்போது அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் கிங் ஆப் கோதா திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தை ஜி ஸ்டூடியோஸ் மற்றும் வேபேரர் பிலிம்ஸ் சேர்ந்து தயாரிக்கின்றது.

பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் இத்திரைப்படத்தின் படபிடிப்பு தமிழ்நாட்டில் உள்ள காரைக்குடியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் படத்தை ஓணம் பண்டிகை முன்னிட்டு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.