
கேரளாவில் மக்கள் ஜனநாயக கட்சி செயல்பட்டு வருகிறது. இந்த கட்சியின் தலைவர் அப்துல் நாசர் மதானி (58). அப்துல் நாசர் மதானி கடந்த 1998 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளியாக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டார். இந்நிலையில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இதேபோன்று பெங்களூருவில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பிலும் அவருக்கு தொடர்புள்ளது. இந்நிலையில் மதானி உடல் நலக்குறைவால் எர்ணாகுளம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் செயற்கை சுவாசம் மூலம் சுவாசம் வழங்கப்படுவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இதனால் இவரது நிலை மோசமாக உள்ளது என செய்திகள் வெளியாகின்றன.