திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் கும்பாபிஷேக மண்டல பூஜை நடைபெற்று வருவதால் விடுமுறை நாட்களில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

இதனை அடுத்து வெளிப்பகாரம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து சாமியை தரிசனம் செய்கின்றனர். இதனையடுத்து வெயில் வாட்டி வதைப்பதால் பக்தர்களின் வசதிக்காக வடக்கு வெளி பிரகாரத்தில் நிழல் பந்தல் அமைக்கப்பட்டிருக்கிறது.