தமிழக விவசாயிகளிடமிருந்து விளைபொருட்களை அரசு நேரடியாக கொள்முதல் செய்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கிடங்கில் சேமித்து வைத்துள்ளது. இந்த பொருட்களை நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் ஆய்வு செய்தார். அந்த ஆய்வுக்கு பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் இதுவரை 3.27 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 5104 கோடி கொள்முதல் தொகை வழங்கப் பட்டுள்ளது.

நடப்பாண்டில் 2866 அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் 22.25 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்குவதற்கு மக்களை வற்புறுத்தக் கூடாது. மக்கள் விருப்பப்படும் பொருட்களை மட்டும் தான் ஊழியர்கள் கொடுக்க வேண்டும். மேலும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் கீழ் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மாதம் முழுதும் ரேஷன் கடைகளில் பொருட்களை வழங்க வேண்டும் என்று கூறினார்.