தமிழகத்தில் இன்றும் நாளையும் வெயில் மிக அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை காணப்படும். குறிப்பாக சென்னையில் 100 பாரன்ஹீட் வரை வெப்பநிலை அதிகரிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் 100 டிகிரி செல்சியஸிற்கும் அதிகமாக சில மாவட்டங்களில் வெப்பநிலையானது இருக்கிறது. குறிப்பாக மதுரையில் 105 டிகிரி வரை வெப்பநிலை பதிவானது. இதைத்தொடர்ந்து தற்போது இன்றும் நாளையும் தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அதே சமயத்தில் இரு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.