ஆப்பிரிக்க நாடான முன் நைஜீரியாவில் கடுமையான பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நைஜீரியாவில் பெண்கள், குழந்தைகள் உட்பட பலரும் பசி, பட்டினியால் துன்புற்று வருகின்றனர். எனவே அங்கு சில சமயங்களில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உணவுகள், உடைகள் போன்ற அத்தியாவசிய தேவையான பொருட்களை வழங்குவதுண்டு.

இதுபோன்று கிறிஸ்துமஸ் பண்டிகை ஒட்டி அனம்பரா மாகாணம் ஓகீஜா நகரில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன. இந்த உணவு பொட்டலங்களை வாங்குவதற்காக பொது மக்கள் ஒரே இடத்தில் குவிந்ததால் அதிகமான நெருக்கடி ஏற்பட்டு கிட்டத்தட்ட 32 பேர் நெரிசல் சிக்கி மூச்சு திணறி உயிரிழந்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து ஆப்பிரிக்க தலைநகரான அபுஜாவில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் ஒரு தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. இதனை பெறுவதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒரே இடத்தில் திரண்டதால் சிறுவர்கள் உட்பட 35 பேர் சம்பவ இடத்திலேயே மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர்.