சத்தீஸ்கர் மாநில சட்டசபையில் ஒரு புதிய திருத்த மசோதா சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த புதிய மசோதாவின் படி ஓய்வூதியம் மற்றும் பணப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மசோதாவின் படி முன்னாள் எம்எல்ஏக்களின் ஓய்வூதியம் 35 ஆயிரம் ரூபாயிலிருந்து 58,300 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு ரயில்வே அல்லது விமான பயணத்திற்கான உதவி தொகை 8 லட்சத்தில் இருந்து 10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் முன்னாள் எம்எல்ஏக்களுக்கு வருடத்திற்கு உதவி தொகையானது 4 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் மாநில அரசின் இந்த முடிவால் அரசுக்கு 16.96 கோடி கூடுதல் செலவாகும்.