இந்தியாவில் வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்களில் பிக்சட் டெபாசிட் கணக்குகளை தொடங்கலாம். ஃபிக்ஸட் டெபாசிட் கணக்குகளை எஸ்பிஐ வங்கி அல்லது போஸ்ட் ஆபீஸ் போன்றவற்றில் எதில் தொடங்கினால் சிறந்தது என்பது குறித்து தற்போது பார்ப்போம். நிலையான வைப்புத் தொகைக்கு எஸ்பிஐ வங்கி 3 முதல் 7.5 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. இதேபோன்று போஸ்ட் ஆபீஸில் அலுவலகக் கால வைப்புகளுக்கு 6.8 சதவீதம் முதல் 7.5 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுவதோடு வருடம் தோறும் வட்டி விகிதமும் மாற்றப்படுகிறது.

வங்கியில் டெபாசிட் செய்யும் கால அளவு 3 நாட்கள் முதல் 10 வருடங்கள் வரை இருக்கலாம். ஆனால் போஸ்ட் ஆபீஸில் 1,2,3 மற்றும் 5 ஆண்டுகளுக்கு மட்டுமே டெபாசிட் கால அளவு இருக்கும். எஸ்பிஐ மற்றும் போஸ்ட் ஆபீஸ் இரண்டுமே நிலையான பிக்சட் டெபாசிட் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை வழங்குகிறது. நீங்கள் குறுகிய கால டெபாசிட்டை தேர்வு செய்ய விரும்பினால் எஸ்பிஐ உங்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். மேலும் நீண்ட கால பிக்சட் டெபாசிட் வருமானங்களுக்கு வருமானத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு உங்களுடைய முடிவை எடுக்கலாம் என பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.