இந்தியாவில் பிரபலமான செய்தி நிறுவனமாக இருக்கும் ஏஎன்ஐ (ANI) twitter கணக்கை டுவிட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டுவிட்டர் நிறுவனத்தை மஸ்க் வாங்கியதிலிருந்து பல்வேறு விதமான அதிரடி நடவடிக்கைகளை கொண்டு வருகிறார். பெருவாரியான ஊழியர்களை twitter நிறுவனத்தில் இருந்து நீக்கியதோடு பிரபலங்கள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்களுக்கு வழங்கப்படும் டுவிட்டர் ப்ளூ டிக்குக்கு மாத சந்தா கட்ட வேண்டும் எனவும் மஸ்க் அறிவித்தார்.

இந்நிலையில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் twitter கணக்கை முடக்கியதோடு குறைந்தபட்ச வயது வரம்பை பூர்த்தி செய்யாததால் தான் முடக்கியுள்ளதாகவும் ட்விட்டர் நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது. அதாவது குறைந்தபட்ச வயது வரம்பை பூர்த்தி செய்தவர்கள் தான் டுவிட்டர் கணக்கை தொடங்க வேண்டுமாம். ஆனால் ஏஎன்ஐ டுவிட்டர் கணக்கை 13 வயதுக்கு கீழே உள்ள ஒருவர் தொடங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் இதனால்தான் டுவிட்டர் கணக்கை முடக்கியுள்ளதாக கூறியுள்ளனர்.