தமிழ் சினிமாவில் வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் நடித்து பிரபலமடைந்தவர் தான் சமீரா ரெட்டி. மேலும் அசல், வெடி, வேட்டை உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்திருக்கிறார். தற்போது சமீரா ரெட்டி அளித்திருக்கும் பேட்டியில் கூறியதாவது “நான் நடிகையாக இருந்து தற்போது தாயாகவும் மாறி இருக்கிறேன். பெண்கள் முதலில் ஆரோக்கியத்துக்கு தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். முதலில் நம் உடலோடு நாம் பேசி, அது சொல்வதை தான் கேட்கவேண்டும்.

என்னுடைய அப்பா டிரை புரூட்ஸ் சாப்பிட பழக்கப்படுத்தினார். நானும் எனது குழந்தைகளுக்கு அதையே ருசி காட்டினேன். நான் ஆரோக்கியமான ஒரு வாழ்க்கை முறையை தேர்ந்தெடுத்துக் கொண்டால் அவர்களும் அதே வழியை அனுசரிப்பர். பெண்கள் ஆரோக்கியத்தின் மீது குடும்ப ஆரோக்கியம் சம்பந்தப்பட்டு உள்ளது. ஆகவே ஆரோக்கியத்தில் கவனம் அவசியம்” என்று அவர் தெரிவித்தார்.