தமிழில் சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் நடித்தவர் ஷாலு ஷம்மு. மேலும் நகுலுடன் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படத்தில் நடித்தார். இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்ததால் இருட்டு அறையில் முரட்டு குத்து 2 படத்தில் கவர்ச்சி வேடம் ஏற்றார்.

இந்நிலையில் ஷாலு ஷம்மு சமூகவலைத்தளத்தில் போட்டோக்களை வெளியிட்டு சலிப்பாக உள்ளது என்ற பதிவையும் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த அவரது ரசிகர்கள் ஷாலுவுக்கு வாழ்க்கையில் சலிப்பு ஏற்பட என்ன நடந்தது என கேள்வி எழுப்பினர். மேலும் சலிப்படைய வேண்டாம் என ஆலோசனை வழங்கியும் ரசிகர்கள் பதிவுகள் வெளியிட்டு வருகின்றனர்.