தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருக்கும் வெற்றிமாறன் தற்போது விடுதலை திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் சூரி ஹீரோவாக நடித்துள்ள நிலையில், விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் கடந்த 31-ஆம் தேதி வெளியாகிய நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விடுதலை படத்தை பார்த்தவர்கள் எல்லோரும் சூரி காமெடியன் கிடையாது அவர் ஹீரோ தான் என்று கூறி வருகிறார்கள். இந்நிலையில் விடுதலை திரைப்படத்தில் தென்றல் ரகுநாதன் நிர்வாண காட்சியில் நடித்திருப்பார். இதுகுறித்து சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்ட நிலையில் தென்றல் ரகுநாதன் தான் நிர்வாணமாக நடித்தது குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, விடுதலை படத்தில் நடிக்கும் போது முதலில் எனக்கு எந்த கதாபாத்திரம் என்று தெரியாது. வெற்றிமாறன் சாரின் படம் என்பதால் அது பற்றி நான் எதுவுமே கேட்கவில்லை. என்னிடம் முதலில் நிர்வாணமாக நடிப்பது பற்றி எதுவும் சொல்லவில்லை. படப்பிடிப்பு தளத்தில் வைத்து தான் காவல் நிலைய காட்சிகளில் நிர்வாணமாக நடிக்க வேண்டும் என்று கூறினார்கள். எனக்கு அப்போது எந்த ஒரு பயமோ தயக்கமோ ஏற்படவில்லை. நான் அங்கு பாதுகாப்பாக இருப்பதாகவே உணர்ந்தேன். படப்பிடிப்பில் நான் நிர்வாணமாக நடிக்கவில்லை. சிஜியில் எடிட் பண்ணி தான் அந்த மாதிரி காண்பிக்கிறார்கள். எனக்கு டப்பிங் பேசும்போது தான் நான் ஹீரோயினின் அம்மாவாக நடித்துள்ளேன் என்பதே எனக்கு தெரியும் என்று கூறியுள்ளார். மேலும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் சகோதரி பவானி ஸ்ரீ தான் விடுதலை திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.