
ஸ்பெயின் நாட்டில் கத்தோலிக்க திருச்சபையின் 266 ஆவது திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்ட போப் பிரான்சிஸ் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து 267 வது போப்பாக லியோ தேர்வு செய்யப்பட்ட நிலையில் கடந்த மே 8ம் தேதி பதவியேற்றார்.
இந்நிலையில் நேற்று வாடிகன் பகுதியில் உள்ள புனித பீட்டர் சதுக்கத்தில் திருப்பலியின் போது லியோவின் பிரசங்கம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் வந்திருந்தனர். அப்போது தனது பிரசங்கத்தை தொடங்கிய லியோ முதலில் இந்தியா – பாகிஸ்தான் தாக்குதல் பற்றி பேசினார்.
அவர் பேசியதாவது, ” இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை நான் வரவேற்கிறேன்…. இதுபோன்று இன்னொரு முறை நடைபெறக்கூடாது.. அனைவரும் அமைதியை கடைபிடிக்க வேண்டும்…. என்று வலியுறுத்திய அவர் உலகெங்கிலும் நடந்து வரும் மோதல்கள் குறித்தும் பேசினார்.
அதோடு ரஷ்யா, உக்ரைனுக்கு இடையே நடந்த போரினால் மில்லியன் கணக்கான மக்கள் தங்களது வாழ்க்கையை இழந்து அவதிப்படுவதாகவும், காசாவில் மக்கள் சந்திக்கும் துன்பங்கள் குறித்தும் பேசினார். மேலும் உலகம் முழுவதும் போர் இல்லாமல் அமைதி நிலவ வேண்டும் என்று தான் கடவுளிடம் பிரார்த்தனை செய்து வருவதாகவும் தெரிவித்தார்.