காஞ்சிபுரம் அடுத்த கருவி மலையில் பட்டாசு ஆலை குடோனில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 7 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இவ்விபத்தில் படுகாயம் அடைந்த 10-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதில் சிலர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்பட்டபட்டது.

இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மேலும் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது 4 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 15-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் பட்டாசு ஆலை உரிமையாளரான அதிமுக பிரமுகர் நரேந்திரன் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டுள்ள நரேந்திரன் 20 ஆண்டுகளாக பட்டாசு ஆலை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.