தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திருச்செந்தூரில் இருந்து டிசம்பர் 17-ஆம் தேதி புறப்பட்ட செந்தூர் விரைவு ரயில் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. கனமழை வெள்ளம் காரணமாக ரயிலில் சிக்கிய 300 பயணிகள் முதலில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள பயணிகளை மீட்பதற்கு சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் கர்ப்பிணி, குழந்தை உட்பட நான்கு பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.

அதன் பிறகு 400 பயணிகள் மீட்கப்பட்டனர். அந்த பயணிகள் பேருந்து மூலம் வாஞ்சி மணியாச்சிக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அங்கிருந்து சிறப்பு ரயில் மூலம் சென்னை எழும்பூருக்கு வந்தடைந்தனர். அவர்களை பார்த்ததும் பயணிகளின் உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர். இதனையடுத்து ரயில் நிலையத்தில் தயாராக இருந்த மருத்துவ குழுவினர் பயணிகளுக்கு சிகிச்சை அளித்து உணவு, தண்ணீர் வழங்கியுள்ளனர்.