அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணை இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டு மணிக்கு தொடங்கிய வழக்கு விசாரணையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தங்களது வாதங்களை முன்வைத்து வருகிறது. அதில் வழக்கு விசாரணை நீதிமன்றத்தின் நடந்து வருவதால் கட்சிப் பணிகள் தேக்கமடைந்து இருக்கின்றது என்று வாதங்களை முன்வைத்தார்.

நீதிபதிகள், இந்த வழக்கில் இடைக்கால உத்தரவுகள் சிலவற்றிற்கு கவனம் செலுத்தி வருகிறோம் என்று தெரிவித்தனர். ஒருவேளை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஏதேனும் இடைக்கால உத்தரவுகள் பெறும் பட்சத்தில் ஓபிஎஸ் தரப்பு அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை என்றால் நீதிபதிகள் எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமான இடைக்கால உத்தரவுகளை பிறப்பிக்க கூடும் என்பதால் தொடர்ந்து  நடைபெற்று வரும் வழக்கு விசாரணை தமிழக அரசியலில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றது.